இனி ரஷ்யா அத்துமீறினால்… ஐரோப்பா, அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி: சாதித்த உக்ரைன்

1 Min Read

எதிர்காலத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா தொடர்ந்து மீறினால், அது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் திட்டத்தை உக்ரைன் சாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல அடுக்கு பதிலடி

இந்தத் திட்டமானது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உக்ரேனிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது.

இனி ரஷ்யா அத்துமீறினால்... ஐரோப்பா, அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி: சாதித்த உக்ரைன் | Ukraine Agrees Plan With Europe Us

மட்டுமின்றி, ரஷ்யாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் எந்தவொரு செயலுக்கும் பல அடுக்கு பதிலடி கொடுப்பதையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அபுதாபியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

புதிய அந்த முன்மொழிவின் அடிப்படையில், ரஷ்யா போர்நிறுத்தத்தை மீறினால், அதற்கு 24 மணி நேரத்திற்குள் ஒரு பதில் நடவடிக்கை எடுக்கப்படும்; அது ஒரு தூதர்கள் தரப்பிலான எச்சரிக்கையுடன் தொடங்கும்.

ஒருங்கிணைந்த பதில்

மேலும், தேவைப்பட்டால், இந்த அத்துமீறலைத் தடுக்க உக்ரேனிய இராணுவத்தின் நடவடிக்கையும் அனுமதிக்கப்படும். அதையும் மீறி ரஷ்யா அத்துமீறல் நீடித்தால், இரண்டாவது கட்ட தலையீட்டிற்கு நகரும்.

இதில், பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, நார்வே, ஐஸ்லாந்து, துருக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய தன்னார்வ நாடுகளின் கூட்டணி இராணுவம் பயன்படுத்தப்படும்.

இனி ரஷ்யா அத்துமீறினால்... ஐரோப்பா, அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி: சாதித்த உக்ரைன் | Ukraine Agrees Plan With Europe Us

ஒரு விரிவான தாக்குதல் நிகழும் பட்சத்தில், ஆரம்பக்கட்ட மீறல் நடந்த 72 மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க இராணுவத்தையும் உள்ளடக்கிய, மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஒரு படையின் ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *