ட்ரம்பின் அழுத்தம்… ரஷ்யாவை புறக்கணித்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கும் இந்தியா

2 Min Read

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் உறுதியானதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கூடுதல் விலை

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு இந்தியா ஒப்புக்கொண்ட பின்னரே இந்த பெரிய ஒப்பந்தம் ஏற்பட்டது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ட்ரம்பின் அழுத்தம்... ரஷ்யாவை புறக்கணித்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கும் இந்தியா | India Heading For Costlier Oil

தற்போது, ​​ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பதும், அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கினால் எவ்வளவு கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதே முதன்மையான கேள்வியாக உள்ளது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், இந்திய ஏற்றுமதிகளுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெளியானத் தகவல்களின் அடிப்படையில், இந்த ஒப்பந்தமானது ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவது மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதை அதிகரிப்பதற்கான ஒரு புரிந்துணர்வை எட்டுவதாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ரஷ்ய எண்ணெய் மிகவும் மலிவான விலையில் வாங்கப்படுகிறது. 2024-ல், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 36 சதவீதம் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதவாது ஒரு நாளைக்கு சுமார் 1.8 மில்லியன் பீப்பாய் எண்ணெய் அப்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, ​​தடையற்ற எண்ணெய் விநியோகத்திற்கு இந்தியாவுக்கு அவர் உறுதியளித்திருந்தார்.

ட்ரம்பின் அழுத்தம்... ரஷ்யாவை புறக்கணித்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கும் இந்தியா | India Heading For Costlier Oil

ஆனால் தற்போது, இந்திய அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கினால், அது கணிசமாக அதிக விலை கொண்டதாக இருக்கும்.

கூடுதல் சுமை

அமெரிக்காவிலிருந்து வாங்குவதன் மூலம், இந்தியா தற்போதைய உலக சந்தை விலைகளின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக, இந்தியா ஒரு பீப்பாய் எண்ணெயை 5 முதல் 10 சதவீதம் அதிக விலையில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும், இது பல பில்லியன் டொலர்கள் சுமையாக மாறும்.

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ஒரு பீப்பாய்க்கு சுமார் 50 முதல் 55 டொலர் வரை செலவாகியுள்ளது.

அமெரிக்கத் தடைகளுக்குப் பிறகும், போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளையும் சேர்த்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் 62 முதல் 65 டொலராகவே நீடித்தது.

ட்ரம்பின் அழுத்தம்... ரஷ்யாவை புறக்கணித்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்கும் இந்தியா | India Heading For Costlier Oil

தற்போது இந்த வேறுபாடு இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதிச் செலவில் 9 முதல் 12 பில்லியன் டொலர் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

அமெரிக்க ஒப்பந்தத்தால் தற்போது விலை வித்தியாசம் ஒரு பேரலுக்கு 600 முதல் ரூ 1,200 வரை இருக்கலாம், இது கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *