இந்தியாவுக்காக வரியை 18% ஆக குறைத்த டிரம்ப்: நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் மோடி

2 Min Read

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரி 18% ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பரஸ்பர வதி விதிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக குறிப்பிட்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% பரஸ்பர வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியா மீதான வரிவிதிப்பை 50% ஆக உயர்த்தினார்.

இந்தியாவுக்காக வரியை 18% ஆக குறைத்த டிரம்ப்: நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் மோடி | Modi Thanks Trump For Reduce Reciprocal Tariffs

இது இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் புதிய விரிசலை ஏற்படுத்தியது.

18% ஆக குறைக்கப்பட்ட வரி

இந்நிலையில் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கான இறக்குமதியை வரியை 25% இருந்து 18% ஆக குறைத்து அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

டிரம்ப் பதிவு

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியுடன் நடந்த உரையாடலை எண்ணி பெருமைப்படுகிறேன், தன்னுடைய அருமையான நண்பர் மற்றும் மதிப்புள்ள தலைவர். மோடியுடனான உரையாடலில் வர்த்தகம், ரஷ்யா-உக்ரைன் போர் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி அளித்ததாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இது உண்மையில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று குறிப்பிட்ட டிரம்ப்,  இந்தியா உடனான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆக குறைக்க இருதரப்பு ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நன்றி

இந்நிலையில் டிரம்பின் வரி குறைப்பு அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள X தளப்பதிவில், 140 கோடி இந்திய மக்களின் சார்பாக டிரம்புக்கு நன்றி. உலக அமைதிக்கும், பொருளாதார வளத்திற்கும் டிரம்பின் தலைமை மிக முக்கியமானது, அமைதிக்கான டிரம்பின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *