ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி மகுடம் சூடிய அல்காரஸ்! என்னால் நம்ப முடியவில்லை என உருக்கம்

1 Min Read

அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனை படைத்த அல்கராஸ், தன்னால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை என தெரிவித்தார்.

ஜோகோவிச், அல்கராஸ் மோதல்

ஞாயிற்றுக்கிழமை நடந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இருவரும் மோதினர்.

Carlos Alcaraz/Novak Djokovicபரபரப்பாக நடந்த இப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் (Carlos Alcaraz) 2-6, 6-2, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) வீழ்த்தினார்.

Novak Djokovic

இதன்மூலம் 22 வயதாகும் இளம் வீரரான அல்கராஸ் முதல் முறையாக அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

நம்ப முடியவில்லை

வெற்றி குறித்து பதிவிட்ட அல்கராஸ், “நான் இதை சாதித்துவிட்டேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். ஒரு கேரியர் கிராண்ட் ஸ்லாம். இந்த அற்புதமான தருணத்தை நான் அனுபவித்து வருகிறேன். எனக்குக் கிடைத்த ஆதரவையும் அன்பையும் என்னால் மறக்க முடியாது” என்றார்.

Carlos Alcaraz

இதற்கிடையில், இந்த பட்டத்தை வென்றதன் நினைவாக அவுஸ்திரேலியாவை குறிக்கும் வகையில் “கங்காரு” பச்சை குத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அது ஒரு கங்காருவாகத்தான் இருக்கப்போகிறது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அது எந்த இடத்தில் இருக்கும் என்றுதான் எனக்கு தெரியவில்லை” என்றார்.

Carlos Alcaraz/Novak Djokovic

Carlos Alcaraz

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *