உலகின் மிக உயரிய இசை விருதை 90 வயதில் பெற்ற தலாய் லாமா: பணிவுடன் ஏற்பதாக உருக்கம்

1 Min Read

சர்வதேச அங்கீகாரமாக கிராமி விருதை 90 வயதில் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா பெற்றுள்ளார்.

தலாய் லாமா

திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவிற்கு (Dalai Lama) தற்போது 90 வயதாகிறது.

Dalai Lama

அவரது Meditations என்ற ஆல்பத்திற்காக, சிறந்த ‘Audio Book, Narration, Storytelling Recording” ஆகிய பிரிவில் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரிய இசை விருதாக பார்க்கப்படுகிறது.

தனக்கு விருது கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து தலாய் லாமா கூறியதாக எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

அந்த பதிவில், “இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இதை நான் தனிப்பட்ட ஒன்றாகப் பார்க்கவில்லை, மாறாக நமது பகிரப்பட்ட உலகளாவிய பொறுப்பிற்கான அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.

அமைதி, கருணை, நமது சுற்றுச்சூழலின் மீதான அக்கறை, மற்றும் மனித குலத்தின் ஒருமைப்பாடு பற்றிய புரிதல் ஆகியவை எட்டு பில்லியன் மனிதர்களின் கூட்டு நலனுக்கு அவசியமானவை என்று நான் உண்மையாக நம்புகிறேன்.

இந்த கிராமி அங்கீகாரம் இந்த செய்திகளை இன்னும் பரவலாக பரப்ப உதவும் என்பதில் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

Grammy Award

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *