ரஷ்ய பெண்களுடன்… விளாடிமிர் புடினின் உளவுத்துறைக்காக: வெளிவரும் எப்ஸ்டீன் இரகசியம்

2 Min Read

ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் உள்ள மறைமுக தொடர்புகள் தற்போது அம்பலமாகியுள்ளன.

அதிர்ச்சியூட்டும் கோப்புகள்

ரஷ்யப் பெண்களைப் பயன்படுத்தி அந்த நாட்டின் மிகப்பெரிய உளவுத்துறைக்காக ஜெஃப்ரி எப்ஸ்டீன் செயல்பட்டுள்ளார் என்றே புதிய தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

ரஷ்ய பெண்களுடன்... விளாடிமிர் புடினின் உளவுத்துறைக்காக: வெளிவரும் எப்ஸ்டீன் இரகசியம் | Epstein Sinister Links With Putin

புடின் மற்றும் ரஷ்யாவின் பெயரைக் குறிப்பிடும் ஆயிரக்கணக்கான அதிர்ச்சியூட்டும் கோப்புகள், எப்ஸ்டீனுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்புகளைப் பற்றி விவாதிக்கும் பெயரிடப்படாத ஆதாரங்களைக் காட்டுகின்றன.

எப்ஸ்டீனும் ரஷ்ய நிழல் உலகத்திற்கு நெருக்கமான மற்றும் ஆழமான தொடர்பு இருந்ததாகவே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இது எப்ஸ்டீனுக்கு ரஷ்யப் பெண்களுடனான உறவுகளையும், அவர்களை அவர் எவ்வாறு அடிக்கடி மேற்கத்திய நாடுகளுக்கு விமானத்தில் அனுப்ப முடிந்தது என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

முன்னாள் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, பில் கேட்ஸ், டொனால்ட் ட்ரம்ப், பில் கிளிண்டன் உள்ளிட்ட மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் இருந்தவர்களும், எப்ஸ்டீன் ஊடாக ரஷ்யாவின் வலையில் சிக்கியிருப்பதையே இது அம்பலப்படுத்தியுள்ளது.

நீதித்துறை வெளியிட்டுள்ள மில்லியன் கணக்கான ஆவணங்களில் ரஷ்ய ஜனாதிபதியின் பெயரை 1,000 பக்கங்களுக்கும் மேலாகவும், கிட்டத்தட்ட 10,000 பக்கங்கள் ரஷ்யாவைக் குறிப்பிடுகின்றன.

ரஷ்ய பெண்களுடன்... விளாடிமிர் புடினின் உளவுத்துறைக்காக: வெளிவரும் எப்ஸ்டீன் இரகசியம் | Epstein Sinister Links With Putin

2,000 காணொளிகள்

பெயர் குறிப்பிடாத ஒரு பிரபலம் 2011ல் புடினை சந்திக்கும் வாய்ய்புக்கு எப்ஸ்டீனை நாடியுள்ளார். 2014ல் ஜப்பான் தொழிலதிபர் ஒருவர் புடினை சந்திக்கும் வாய்ப்புக்கு எப்ஸ்டீனை துணைக்கழைத்துள்ளார். 2010ல் ரஷ்ய விசா தொடர்பில் உதவி வேண்டுமா என எப்ஸ்டீன் ஒருவருக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் பராக் உடன் நெருக்கமான உறவு வைத்திருந்த எப்ஸ்டீன், இஸ்ரேலில் உளவாளிகளுக்கான பயிற்சியும் முடித்துள்ளார்.

இருப்பினும், வெளியான கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உயர்மட்டப் பெயர்களும் எப்ஸ்டீனுடனான தங்கள் தொடர்பில் உள்ள அனைத்து தவறுகளையும் மறுத்துள்ளனர்.

ரஷ்ய பெண்களுடன்... விளாடிமிர் புடினின் உளவுத்துறைக்காக: வெளிவரும் எப்ஸ்டீன் இரகசியம் | Epstein Sinister Links With Putin

சமீபத்தில் நீதித்துறை வெளியிட்டுள்ள மில்லியன் கணக்கான ஆவணங்களில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 2,000 காணொளிகள் மற்றும் 180,000 புகைபடங்களும் அடங்கும்.

மட்டுமின்றி, இந்த ஆவணங்களில் ஒன்றில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *