அமெரிக்கா தொடங்கினால்… அது ஒரு பிராந்தியப் போராக வெடிக்கும்: எச்சரிக்கும் ஈரானின் காமெனி

1 Min Read

அமெரிக்கா ஈரானை தாக்கினால் அது ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் என்று ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி எச்சரித்துள்ளார்.

கிளர்ந்தெழுவார்கள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே, நாளுக்கு நாள் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே காமெனியின் கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தொடங்கினால்... அது ஒரு பிராந்தியப் போராக வெடிக்கும்: எச்சரிக்கும் ஈரானின் காமெனி | Tehran Warns Regional Conflict

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடன்படவில்லை என்றால், அமெரிக்காவின் தலையீடு உறுதி என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை மிரட்டியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது கடற்படை இருப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ட்ரம்ப் தொடர்ந்து கப்பல்களை அனுப்பி வருவதாகக் கூறுகிறார், ஈரானிய நாடு இந்த விடயங்களால் பயப்படாது, ஈரானிய மக்கள் இந்த அச்சுறுத்தல்களால் கிளர்ந்தெழுவார்கள் என்பது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று காமெனி கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் எந்த நாட்டையும் தாக்க விரும்பவில்லை, நாங்கள் அப்படியான நாட்டவர்கள் அல்ல, ஆனால் ஈரானிய நாடு அவர்களைத் தாக்கி துன்புறுத்தும் எவருக்கும் எதிராக வலுவான பதிலடியை அளிக்க மறக்காது என்றும் அலி காமெனி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈரானுடம் ஒப்பந்தத்திற்கு தயார் என ஒருபக்கம் கூறிவரும் டொனால்ட் ட்ரம்ப், மறுபக்கம் நவீன போர்கப்பல்களையும் மத்திய கிழக்கிற்கு அனுப்பி வருகிறார்.

அமெரிக்கா தொடங்கினால்... அது ஒரு பிராந்தியப் போராக வெடிக்கும்: எச்சரிக்கும் ஈரானின் காமெனி | Tehran Warns Regional Conflict

கண்மூடித்தனமான

இதனிடையே, தங்களின் தற்காப்புத் திறன்களைக் குறைக்க முயலாத நியாயமான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

இதுவரை 6 மிகப்பெரிய மற்றும் பலம் பொருந்திய 6 கப்பல்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. டிசம்பர் கடைசியில் வெடித்த போராட்டங்களின் எண்ணிக்கை 6713 என்றே அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தொடங்கினால்... அது ஒரு பிராந்தியப் போராக வெடிக்கும்: எச்சரிக்கும் ஈரானின் காமெனி | Tehran Warns Regional Conflict

ஆனால், 3117 என ஈரான் நிர்வாகம் தெரிவிக்கின்றது. மேலும், ஈரானின் இந்த நிலைமைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கண்மூடித்தனமான பொருளாதாரத்தடைகளே என்றும்,

மத்திய கிழக்கு நாடுகளின் செல்வாக்கை அழிக்கவே மேற்கத்திய நாடுகள் சூழ்ச்சி செய்வதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, டொலரின் மதிப்பை தக்கவைக்கவே, மத்திய கிழக்கு நாடுகளை அமெரிக்கா குறிவைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *