பனிச்சிறுத்தையுடன் திகிலூட்டும் செல்ஃபி எடுத்த பெண்: அடுத்த நிமிடத்தில் நேர்ந்த விபரீதம்

1 Min Read

சீனாவில் இளம்பெண்ணொருவர் பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்தபோது தாக்குதலுக்கு உள்ளனர்.

பனிச்சறுக்கு வீராங்கனை

வடக்கு சீனாவின் ஃபுன்யூன் கவுண்டியில் உள்ள கெகெதுவோஹாய் யுனெஸ்கோ உலக புவியியல் பூங்காவின் தலட் கிராமப் பகுதியில், பனிச்சறுக்கு வீராங்கனை ஒருவர் ஹொட்டலுக்கு திரும்ப இருந்தார்.

girl attacked by snow leopard in china taking selfie

அங்கு பனிச்சிறுத்தை ஒன்றை கண்ட அவர் அதனுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பனிச்சிறுத்தை பாய்ந்து வந்து அவரை முகத்திலேயே தாக்கியது.

உடனே பனிச்சறுக்கு பயிற்சியாளர் ஒருவர் தனது கம்புகளை அசைத்து அதை விரட்டியடித்தார்.

தலைக்கவசத்தால் தப்பிய இளம்பெண்

பின்னர் மக்கள் அவரை மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்பெண் தனது தலைக்கவசத்தால் மேலும் கடுமையான காயங்களில் இருந்து தப்பினார்.

உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வனவிலங்கிற்கு மிக அருகில் ஆபத்தான முறையில் சென்றபோதே இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

girl attacked by snow leopard in china taking selfie

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *