காசாவை மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: ஒரே நாளில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: IDF விளக்கம் again

1 Min Read

நீண்ட இடைவெளிக்கு பிறகு காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், சனிக்கிழமை காசாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவை மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: ஒரே நாளில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: IDF விளக்கம் again | Israel Attack Gaza 30 Palestinians Died

அக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தற்காலிகக் கூடாரங்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள தாக்குதல் இது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை, பெண்கள் உயிரிழப்பு

அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு தாய் உட்பட அவரது 3 குழந்தைகள் மற்றும் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், மதிய வேளையில் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காசாவை மீண்டும் தாக்கிய இஸ்ரேல்: ஒரே நாளில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: IDF விளக்கம் again | Israel Attack Gaza 30 Palestinians Died

கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் தந்தை ஒருவர் மற்றும் அவரது 3 குழந்தைகள் 3 பேரக் குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

விளக்கமளித்த இஸ்ரேலிய ராணுவம்

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் நிலைகளை குறிவைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 4 முக்கிய தளபதிகள் மற்றும் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையின் போது ஹமாஸ் தாக்குதலுக்கு பயன்படுத்தும் இரண்டு ஏவுதளங்கள் தகர்க்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *