இலங்கையில் எரிபொருள் விலை குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கையில் மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இன்று நள்ளிரவு முதல்(31/01/2026) புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட புதிய விலையின் படி, லங்கா வைட் டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
லங்கா சூப்பர் டீசல் மற்றும் லங்கா மண்ணெண்ணெய் மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் ஆகியவற்றின் விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.





