பிரித்தானிய மன்னர் சார்லஸ், தன் இளைய மகனான இளவரசர் ஹரியுடன் சமரசம் செய்துகொள்வதற்காக, மிகப்பெரிய, தனிப்பட்ட நடவடிக்கை ஒன்றை எடுக்க இருப்பதாக ராஜகுடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகனுக்காக மன்னர் சார்லஸ் எடுக்கவிருக்கும் நடவடிக்கை
ஆம், தன்னுடைய தனிப்பட்ட இல்லமான பால்மோரல் மாளிகையில் இளவசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகனுடன் நேரம் செலவிட திட்டமிட்டுள்ளாராம் மன்னர் சார்லஸ்.

இது, தன் மகன் மற்றும் மருமகளுடனான உறவை சீர் செய்ய அவர் விரும்புகிறார் என்பதற்கு அடையாளமாக கருதப்படுகிறது என்கிறார் ராஜகுடும்ப நிபுணரான ராப் (Rob Shuter).
ஆனால், தந்தையின் இந்த திட்டத்தை இளவரசர் வில்லியம் கடுமையாக எதிர்ப்பதாகவும் ராப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




