பிக் பாஷ் லீக் 2025-26 தொடரின் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 132 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்டீவன் ஸ்மித் அவுட்
பெர்த்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான BBL இறுதிப்போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பெர்த் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ஸ்டீவன் ஸ்மித்தின் சிட்னி சிக்ஸர்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
டேனியல் ஹூக்ஸ் 7 ஓட்டங்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 13 பந்துகளில் 24 ஓட்டங்களும், ஜோஷ் பிலிப் 24 பந்துகளில் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
BBL/X
அதன் பின்னர் ஷா (14), அணித்தலைவர் ஹென்ரிக்ஸ் (24) ஆட்டமிழக்க விக்கெட் சரிவை சந்தித்த சிட்னி சிக்ஸர்ஸ் 20 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஜய் ரிச்சர்ட்சன், டேவின் பய்ன் தலா 3 விக்கெட்டுகளும், மஹ்லி பியர்ட்மன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.




