தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.., வானிலை மையம் தகவல்

1 Min Read

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை மையம் கூறுகையில்..,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால், 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாயுப்புள்ளது.

குறிப்பாக, இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.., வானிலை மையம் தகவல் | Heavy Rain In 9 Districts Of Tamil Nadu Today

மேலும் கடலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக நாளையும் மிதமான மழை நீடிக்கக்கூடும்.

தமிழ்நாட்டின் குறைந்தபட்ட வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *