SA20 குவாலிபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது.
குவாலிபையர் 2 போட்டி
ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த SA20 குவாலிபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 114 ஓட்டங்களே எடுத்தது. கைல் வெர்ரெய்ன்னே ஆட்டமிழக்காமல் 52 (46) ஓட்டங்கள் எடுத்தார்.
அபாரமாக பந்துவீசிய செனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) 15 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஜேம்ஸ் கோல்ஸ்
பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 11.4 ஓவர்களில் 117 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேம்ஸ் கோல்ஸ் (James Coles) 45 ஓட்டங்களும், டி காக் 25 (12) ஓட்டங்களும் விளாசினார்.
19 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்கள் விளாசிய ஜேம்ஸ் கோல்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற, 25ஆம் திகதி பிரிட்டோரியா கேபிட்டல்ஸை எதிர்கொள்ள உள்ளது.




