சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகளுக்கு இடையிலான சேலஞ்சர் போட்டி நடந்து வருகிறது.
ஸ்டீவன் ஸ்மித்
ஹோபர்ட் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.
ஹுக்ஸ் 13 ஓட்டங்களிலும், பிலிப் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க ஸ்டீவன் ஸ்மித் அதிரடியில் மிரட்டினார்.
அரைசதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 43 பந்துகளில், ஒரு சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
டேவிஸ் அதிரடி
அணித்தலைவர் ஹென்ரிக்ஸ் 8 பந்துகளில் 19 ஓட்டங்களும், ஜோயல் டேவிஸ் 12 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.
லச்லன் ஷா 21 ஓட்டங்கள் விளாச, சிட்னி சிக்ஸர்ஸ் அணி 198 ஓட்டங்கள் குவித்தது.
ரிலே மெரிடித் 3 விக்கெட்டுகளும், ஸ்டான்லெக் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.




