நேட்டோ அமைப்பை பாதுகாத்ததாக டிரம்ப் பெருமிதம்: தீவிரமடையும் கிரீன்லாந்து சர்ச்சை

1 Min Read

நேட்டோ அமைப்பை தான் காப்பாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் பரபரப்பு கருத்து

திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில், வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனம்(NATO) என்ற அமைப்பை தான் தான் பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பை பாதுகாத்ததாக டிரம்ப் பெருமிதம்: தீவிரமடையும் கிரீன்லாந்து சர்ச்சை | Trump Said He Saved Nato Amid Greenland Issue

இந்த கூட்டணியில் அமெரிக்கா வலுவாக இருக்கும் என்று டிரம்ப் உறுதியளித்தாலும், மீண்டும் மற்ற உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்த சந்தேகங்களை டொனால்ட் டிரம்ப் எழுப்பியுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அமெரிக்கா துணை நிற்கும். ஆனால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என்றால் நேட்டோ கூட்டணியில் உள்ள நாடுகள் அதே அளவிலான பாதுகாப்பை தருமா என்பதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து சர்ச்சை

அமெரிக்கா சமீப காலமாக கிரீன்லாந்து தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என கூறி வரும் நிலையில், கிரீன்லாந்து இறையாண்மைக்கும், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் கிரீன்லாந்தின் பாதுகாப்பு பலப்படுத்த நேட்டோ தயாராக இருப்பதாக அல்பாரஸ் எச்சரிக்கை விடுத்த நிலையில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

நேட்டோ அமைப்பை பாதுகாத்ததாக டிரம்ப் பெருமிதம்: தீவிரமடையும் கிரீன்லாந்து சர்ச்சை | Trump Said He Saved Nato Amid Greenland Issue

கிரீன்லாந்தை அடையும் முயற்சி எளிமையான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ அடையப்படும் என்று டிரம்ப் அதிரடியாக தெரிவித்து இருந்தார்.

மேலும் இது தொடர்பாக டென்மார்க் அதிகாரிகளை அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *