எங்களை அடிமைப்படுத்த முடியாது… ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த கரீபியன் தீவு நாடு

2 Min Read

அமெரிக்காவுடன் உடனடியாக ஒப்பந்தம் செய்துகொள்ள கியூபா அரசாங்கத்திற்கு ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், தனது தாய்நாட்டை கடைசி சொட்டு இரத்தம் வரை பாதுகாப்பதற்குத் தயாராக உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

தார்மீக அதிகாரம் இல்லை

வெனிசுலாவின் எண்ணெய் அல்லது பணம் இனி கியூபாவிற்குச் செல்லாது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எங்களை அடிமைப்படுத்த முடியாது... ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த கரீபியன் தீவு நாடு | Cuba Defiant After Trump Says

ட்ரம்பின் இந்த மிரட்டல் பேச்சு கியூபா ஜனாதிபதியின் கோபத்தை தூண்டியுள்ளது. வெனிசுலா கியூபாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாக இருந்தாலும், நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதிலிருந்து, வெனிசுலா துறைமுகங்களிலிருந்து கியூபாவிற்கு எந்த சரக்குக் கப்பல்களும் புறப்படவில்லை.

ஆனால், வெனிசுலாவின் 50 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான எண்ணெயை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான 2 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் தொடர்பாக கராகஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, கியூபா தங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தாமதப்படுத்தினால் பாதிக்கப்படக் கூடும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

எங்களை அடிமைப்படுத்த முடியாது... ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த கரீபியன் தீவு நாடு | Cuba Defiant After Trump Says

கடைசி சொட்டு இரத்தம்

இதற்கு பதிலளித்துள்ள கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல், கியூபா மீது ஒரு ஒப்பந்தத்தை திணிக்க அமெரிக்காவிற்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை என்றார்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கட்டளையிட முடியாது. கியூபா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவதில்லை; ஆனால் கியூபா 66 ஆண்டுகளாக அமெரிக்காவால் தாக்கப்பட்டு வருகிறது,

எங்களை அடிமைப்படுத்த முடியாது... ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த கரீபியன் தீவு நாடு | Cuba Defiant After Trump Says

கியூபா எந்த நாட்டையும் அச்சுறுத்துவதுமில்லை; தாய்நாட்டை கடைசி சொட்டு இரத்தம் வரை பாதுகாப்பதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறது என்றார்.

உண்மையில், கியூபாவை ட்ரம்ப் ஏன் மிரட்டுகிறார் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவில்லை. ஆனால், கரீபியன் நாடுகள் உட்பட அமெரிக்காவின் ஆளுமைக்கு கொண்டுவர வேண்டும் என ட்ரம்ப் திட்டமிட்டு வரலாம் என்றே கூறுகின்றனர்.

வெனிசுலா மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை, கியூபா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *