தென்தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
லட்சத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது.
மேலும், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 6ஆம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.




