2026-ல் AI துறையில் முன்னிலை பெறவுள்ள Apple – அறிக்கை

1 Min Read

2026-ல் Apple நிறுவனம் AI துறையில் முன்னிலை பெறவுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது.

Apple நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக AI துறையில் போட்டியாளர்களை விட பின்தங்கியிருந்தது.

2024-ல் WWDC மாநாட்டில் Apple Intelligence என்ற பெயரில் AI அம்சங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை பெரும்பாலும் Writing Tools, Image Playground, Clean Up, Genmoji போன்ற அடிப்படை அம்சங்களாகவே கருதப்பட்டன. மேலும், AI Notification Summaries அம்சம் பிழைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

2025 முழுவதும் Apple, AI-யில் பெரிய முன்னேற்றம் எடுக்க முடியாமல் இருந்தது.

ஆனால், The Information வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2026-ல் Apple தனது AI பயணத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple AI comeback 2026, AI-powered Siri release date, Apple Intelligence WWDC 2024 features, Apple partnerships Anthropic Google, Private Cloud Compute Apple AI, NPU-enabled chipsets Apple devices, Siri AI upgrade spring 2026, Apple vs Google AI competition, Apple OpenAI collaboration 2024, Future of Apple AI ecosystem

முக்கிய காரணங்கள்

Private Cloud Compute (PCC) மற்றும் NPU-enabled chipsets மூலம் வலுவான AI அடித்தளத்தை Apple உருவாக்கியுள்ளது.

OpenAI-க்கு அப்பால், Anthropic மற்றும் Google போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

Apple-ன் AI ஆராய்ச்சி குழு பல்வேறு புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

2026 வசந்த (செப்-நவ) காலத்தில், நீண்டநாள் காத்திருப்பு முடிவுக்கு வந்து, AI-powered Siri அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது Apple-க்கு AI துறையில் பெரிய முன்னேற்றத்தை வழங்கும் முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *