தமிழ் நடிகர் விஜயின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற்ற நிலையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தவெக தலைவருமான விஜய், அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், ஜன நாயகன் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.

இதன் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் திகதியான இன்று மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது.
நாமல் ராஜபக்ச வாழ்த்து
இந்நிலையில் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி விஜய் தனக்கு எப்போது மிகவும் பிடித்த நடிகர். அவர் சினிமாவிலும், வெள்ளித்திரையிலும் கொண்டு வந்த ஆற்றல் உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் மறக்க முடியாதது.
விஜய் தற்போது இந்த அத்தியாயத்தை விட்டுவிட்டு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் போது சினிமா அவரது இருப்பை நிச்சயமாக இழக்கும்.
விஜய்க்கு வெற்றியைத் தவிர வேறு எதுவுமே இல்லை, மேலும் எதிர்வரும் அவரது பயணமும் சிறப்பானதாக இருக்க விரும்புவதாக நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.




