40 வயதில் புதிய வரலாறு படைத்த ரொனால்டோ! நொறுங்கிய மெஸ்ஸியின் இமாலய சாதனை

1 Min Read

2025யில் 40வது கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்தார்.

ரொனால்டோ

சவூதி ப்ரோ லீக் தொடரின் நேற்றையப் போட்டியில் அல்-நஸர் மற்றும் அல் அக்டௌத் அணிகள் மோதின.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 31 மற்றும் 45+3வது நிமிடங்களிலும், ஃபெலிக்ஸ் 90+4வது நிமிடத்திலும் கோல்கள் அடிக்க அல்-நஸர் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆண்டில் 40 வயதாகும் ரொனால்டோவின் கோல்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

Cristiano Ronaldo

ஐரோப்பாவை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தொடர்ச்சியாக 3வது சீசனாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

40 கோல்கள்

இதன்மூலம், அதிக முறை ஓர் ஆண்டில் 40 கோல்கள் அடித்த வீரர் என்ற லியோனல் மெஸ்ஸியின் இமாலய சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்தார்.

Cristiano Ronaldo

மெஸ்ஸி 13 முறை 40 கோல்கள் அடித்த நிலையில், ரொனால்டோ 14வது ஆண்டாக அதனை முந்தி சாதனை படைத்துள்ளார்.

Cristiano Ronaldo

இவர்களுக்கு அடுத்த இடங்களில் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (9), கிலியன் எம்பாப்பே (5), ஹாரி கேன் (5), எர்லிங் ஹாலண்ட் (5) ஆகியோர் உள்ளனர்.

Lionel Messi

Robert Lewandowski

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *