இலங்கையில் பொலிஸார் திடீர் சோதனை: பல வெளிநாட்டு பெண்கள் கைது

1 Min Read

இலங்கையில் நேற்றிரவு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையில் பல வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் திடீர் சோதனை

இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட விடுதியை பொலிஸார் நேற்று திடீரென சுற்றிவளைத்து சோதனை நடத்தினர்.

இலங்கையில் பொலிஸார் திடீர் சோதனை: பல வெளிநாட்டு பெண்கள் கைது | Foreign Women Arrested In Colombo Massage Centre

இந்த சுற்றிவளைப்பு சோதனையில் கொழும்பு தெற்கு பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது விடுதியின் உரிமையாளர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணையில் ஜா-எல பகுதியை சேர்ந்த  58 வயதுடைய நபர் இந்த விடுதியின் உரிமையாளராக இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்குரிய பெண்கள் 25 முதல் 41 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *