ரூ. 500 பில். குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது – விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பின்றி அனுமதி

0 Min Read

பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று (19) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தக் குறைநிரப்பு மதிப்பீடை பிரதமர் நேற்று (18) பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

அதற்கமைய, இன்று மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 6.10 மணி வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், ரூ. 500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி அங்கீகரிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *