முதியோருக்கான டிசம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு

1 Min Read

முதியவர்களுக்கான டிசம்பர் மாத அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவே வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக குறித்தபயனாளிகள் தமக்கான இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை  குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் மூலம்  616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் அதற்காக  3,081,730,000 ரூபாவுக்கும்  அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *