– அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்
2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அந்த வகையில் 6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என்றும் மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




