640 பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு – ஊவா 524, மத்திய 111, வடமேல் 5 பாடசாலைகள் திறக்கப்படாது

Karan
By
Karan
0 Min Read

அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (16) ஆரம்பமாகவுள்ளன.

ஆயினும் ஊவா, மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஏனைய 6 மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நாளை முழுமையாக திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் நாளை (16) திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *