2,284 அரச சேவைக்கான பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

Karan
By
Karan
17 Min Read

– சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு 3% வட்டி விகிதத்தில் கடனுதவி

– பேரிடருக்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களுக்கு ரூ. 25,000
– ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்திலிருந்து நன்கொடை
– மின்தறி திட்ட ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவில் திருத்தம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 20 முடிவுகள்

2,284 அரச சேவையின் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்பிற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 20 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விதந்துரையை அமுல்படுத்த  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையின் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால வரையறையை இனங்கண்டு அது சார்ந்த அத்தியாவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஆட்சேர்ப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சும் தமது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் நியமனம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக மேற்குறித்த குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கருத்தில் கொண்டு 2025-11-14 திகதி நடைபெற்ற மேற்குறித்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய பின்வரும் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவுக் குடியரசு சுகாதார அமைச்சுக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
பட்டப்பின் படிப்புத் துறையில் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கும், மாலைதீவின் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களுக்கு எமது நாட்டில் பயிற்சிகளை வழங்கும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவுக் குடியரசு சுகாதார அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், சுகாதாரப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக இருதரப்பினருக்கும் இடையில் வேறாக ஏற்படுத்திக் கொள்கின்ற உடன்பாட்டு ஒப்பந்தத்திற்கமைய, மாலைதீவுக்குத் தேவையான விசேட நிபுணத்துவ மருத்துவர்களை குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு எமது நாட்டின் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்;க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவுக் குடியரசு சுகாதார அமைச்சுக்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக  பிரதமர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியைப் பெற்றுக் கொள்ளல்
வடமத்திய மாகாணத்தின் மஹஎல ஆற்றின் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்வதற்காக வடமத்திய மாகாணத்தின் மஹஎல ஆற்றுடன் இணைக்கப்பட்ட பிரதேசங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் விநியோகக் கட்டமைப்புக்களுடன் கூடிய வணிக விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை உள்ளிட்ட மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 இனை அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக அசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இணை நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கு 2025.05.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹ_ருளு வாவி, மஹகனதராவ வாவி, நாச்சதூவ வாவி, நுவர வாவி மற்றும் திசாவாவி போன்ற பிரதான நீர்ப்பாசன உத்தேசத் திட்டங்களுக்கு இக்கருத்திட்டத்தின் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், 17,500 ஹெக்ரெயார் காணியில் பயிரிடுவதற்கான வசதிகள் வழங்கப்படும். அத்துடன், கருத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மூலம் 175,000 குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகளுக்கு 536.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டுச் செலவில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியிடலை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் பெற்றுக் கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக  ஜனாதிபதி  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பெரஹர மாவத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள காணியை கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் விடுவித்தல்
பெரஹர மாவத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள 02 றூட் 23.1 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை வதிவிட வசதிகள் உள்ளிட்ட கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளருக்க விடுவிப்பதற்காக 2024.09.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த முதலீட்டாளர் ஏற்புடைய விடுவிப்பு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமையால், குறித்த காணிக் குத்தகையை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பேச்சுவார்த்தைக் குழு விதந்துரை வழங்கியுள்ளது. அத்துடன், பொருத்தமான அபிவிருத்திப் பணிக்காக அக்காணியை விடுவிப்பதற்காக மீண்டும் முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்காக 2025.09.04 அன்று இடம்பெற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காணியை விடுவிப்பதற்கு ஏற்புடையவாறு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவால் வதிவிட வசதிகளுக்கு காணியின் அளவில் 50% வீதம் உயர்ந்தபட்சம் பயன்படுத்தக்கூடியதான நிபந்தனையின் அடிப்படையில், ஹோட்டல் அல்லது வணிக நடவடிக்கைகளுக்கு குறித்த காணியைப் பயன்படுத்துவதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கமைய, குறித்த காணியை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடுவிப்பதற்கு சர்வதேச போட்டி விலைமுறி முறைமையின் கீழ் முன்மொழிவுகளைக் கோருவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்
இளைஞர் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் துறைகளில் நீண்டகால ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், அதற்காக கட்டமைப்பு ரீதியான சட்டகத்தைத் தாபித்தல், நிகழ்ச்சித்திட்டங்கள், விசேட நிபுணத்துவம், தொழிநுட்ப அறிவு மற்றும் இயலளவை விருத்தி செய்கின்ற தொடக்க முயற்சிகளைப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இரு நாட்டு இளைஞர்களை வலுவூட்டல், தலைமைத்துவ அபிவிருத்தி, விளையாட்டு செயலாற்றுகை மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மாலைதீவு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி பேண்தகு அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக ஆர்வங் காட்டுகின்ற பல நாடுகள் இயற்கை மூலதனப் பெறுமதியை மதிப்பீடு செய்தல் மற்றும் கணக்கிடலை மேற்கொண்டாலும், இலங்கையில் இயற்கை மூலதனப் பெறுமதி மதிப்பிடல் மற்றும் கணக்கிடல் இதுவரை சரியான வகையிலும் போதுமான அளவிலும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு உலகளாவிய சுற்றாடல் வசதிகளின் ஏழாம் உதவித்திட்டத்தின் கீழ் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சங்கம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஏனைய பங்காளர்களுடைய ஒத்துழைப்புக்களுடன் ‘இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி பேண்தகு அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்தல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதி (Global Environment Facility) இன் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த கருத்திட்டத்தின் செயற்பாடுகள் காலி, மன்னார், புத்தளம் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்ட கரையோரப் பிரதேசங்களில் 04 வருடங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக 2.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப் பெறவுள்ளது. அதற்கமைய, உலகளாவிய சுற்றாடல் வசதியால் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதந்கான உடன்பாட்டு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சு மற்றும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் சுற்றாடல் அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்தல்
அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும் மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் பல கருத்திட்டங்கள் மூலம் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டடங்கள் மற்றும் வசதிகள் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும், யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் சில குறிப்பிட்ட காலப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு இயலுமை கிட்டவில்லை. அதற்கமைய, கீழ்க்காணும் கட்டுமானங்களைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்கான முன்மொழியப்பட்டவாறான மொத்த செலவு மதிப்பீட்டை திருத்தம் செய்வதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக  ஜனாதிபதி  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்திட்டத்தின் பெயர்செயற்பட வேண்டிய விதம்
01.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகுக்கான கட்டிடத்தின் 4 ஆவது மற்றும் 5 ஆவது மாடிகளைப் பூர்த்தி செய்தல்முறையான பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து தேர்ந்தெடுக்கப்படும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் பூர்த்தி செய்தல்
02.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்ம தொழிநுட்பம் கட்டிடத்தின் ii ஆம் கட்டத்தை நிர்மாணித்தல்
03.களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் விரிவுரை மண்டபக் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல்ஆரம்ப ஒப்பந்தக்காரர்கள் மூலமாக நிதி மற்றும் விலை மாற்றத்தை மாத்திரம் வழங்கிப் பூர்த்தி செய்தல்
04.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 17 மாடிகளுடன் கூடிய உத்தேச கட்டிடத்தொகுதியின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல்எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக தேவையான நிதியொதுக்கீடுகள் 2025 மற்றும் 2026 போன்ற ஆண்டுகளில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செலவு விடயதானத்தின் கீழ் ஒதுக்கப்படுகின்ற நிதியில் முகாமைத்துவப்படுத்தல்
05.இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிலையத்திற்கான உத்தேச கட்டிடத்தை நிர்மாணித்தல்ஆரம்ப ஒப்பந்தக்காரர்கள் மூலமாக நிதி மற்றும் விலை மாற்றத்தை மாத்திரம் வழங்கிப் பூர்த்தி செய்தல்

8. இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் காணப்படுகின்ற உருக்குலைந்த இரும்பு உலோகங்களை அகற்றுதல்
இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் காணப்படுகின்ற உருக்குலைந்த இரும்பு உலோகங்களை அகற்றுவதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, 11 விலைமனுதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர. குறித்த விலைமனுக்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான பதிலளிப்புக்களை வழங்கியுள்ள உயர்ந்தபட்ச விலையை சமர்ப்பித்துள்ள விலைமனுதாரரான M/s. Melwire Rolling (Pvt) Ltd  இற்கு 721.257 மில்லியன் (பெறுமதிசேர் வரி உட்பட) தொகைக்கு  M/s. S R Steel (Pvt) Ltd இற்கு 167.507 மில்லியன் (பெறுமதிசேர் வரி உட்பட) ரூபாய்களுக்கு பழுதடைந்த இரும்பு உலோகங்களை அகற்றுவதற்கான விலைமனுவை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. நாடளாவிய ரீதியில் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான வாகனக் கொள்வனவு
ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்துடன் நிதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது. தொற்றல்ல நோய்களைத் தடுத்தல் மற்றும் முகாமைத்துவம், முதியோர்களுக்கான பராமரிப்பு உதவிகள், சமூக மட்டச் சேவைகளைப் பலப்படுத்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய அவசர சுகாதார நிலைமைகளுக்கு மீட்சித்திறனைக் கட்டியெழுப்புவதல் உள்ளிட்ட சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், குறித்த கருத்திட்டம் 2024 தொடக்கம் 2028 வரையான காலப்பகுதியில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அமுல்படுத்தப்படும். களநிலைப் பணியாளர்கள் (குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தாதியர் மற்றும் கண்காணிப்புக் குழு) இற்கான போதியளவு போக்குவரத்து இன்மையால் இக்கருத்திட்டத்தில் அடையாளங் காணப்பட்ட தீர்மானம்மிக்க தடையாக அமையும். அதனால், வீட்டுமட்டத்திலான பராமரிப்பு மற்றும் சமூகத் தொடர்புகளை விரிவாக்கம் செய்தல், களநிலை ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்தல், சிகிச்சைக் கழிவுகளைப் பாதுகாப்பாகவும் சரியான நேரத்தில் ஏற்றிச் செல்வதை உறுதிப்படுத்துவதற்கான போக்குவரத்து இயலுமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகனங்களை கீழ்க்காணும் வகையில் பெறுகை செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. திருகோணமலை மாவட்டத்தில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்கள் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைத்தல்
திருகோணமலை மாவட்டத்தின் கின்னியா பிரதேச செயலகப் பிரிவில் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவகத்தை நிர்மாணிப்பதற்கு 2017.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு ரூ. 25.45 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. பின்னர் மேலெழுந்துள்ள நிலைமைகளால் அப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நிறுவகம் திட்டமிட்டவாறு அக்காணியிலேயே மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லையென்பதை தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் (UNIVOTEC) தீர்மானித்துள்ளது. அதனால், கின்னியா பல்கலைக்கழகத்தின் தொடர் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு, பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் அதன் கட்டுமானங்களை சுற்றுலாத்துறைக் கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்கு வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக  பிரதமர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நெசவு திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்து 1980 – 1982 காலத்தில் தனியார் மயப்படுத்தப்பட்ட மின்தறி (Pover Loom)  திட்டங்களின் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவை திருத்தம் செய்தல்.
நெசவு திணைக்களத்தின் கீழ் செயற்பட்ட மின்தறி தொழிற்சாலைகள் தனியார் மயப்படுத்தப்பட்டமை காரணமாக தொழிலை இழந்த மற்றும் 10 ஆண்டு சேவைக் காலம் பூர்த்தி செய்யாமை காரணமாக ஓய்வூதிய உரித்தை பெற முடியாது போன ஊழியர்களுக்கு தற்போது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு, சமகால வாழ்க்கை செலவுடன் ஒப்பீடு செய்யும் போது போதுமானதல்ல என இனங்காணப்பட்டுள்ளது. 2025-04-21 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய மேற்குறித்த ஊழியர்களுக்கு அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளை வழங்குவதற்கான இயலுமை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்பட்ட போதிலும், தற்போதுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளின் கீழ் நேரடியாக அவர்களுக்கு அவ்வாறான நிவாரணத்தை வழங்குவதற்கான இயலுமை இல்லையெனத் தெரியவந்துள்ளது. எனவே, குறித்த ஊழியர்களில் தற்போது ரூ. 5,000 ஐ விடவும் குறைந்த மாதாந்த கொடுப்பனவு பெறும் ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு 2026.01.01 திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ரூ. 5,000 எனத் திருத்தம் செய்து வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர்  அமைச்சரவைக்கு தெரிவித்திருந்தார். அதற்கமைய நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

15. ஜேர்மன் கிரேன்க்ஃபர்ட் விமான நிலையத்தில் (FRA)  ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு தரை நடவடிக்கை சேவை வழங்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்.
ஜேர்மன் கிரேன்க்பர்ட் விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்காக விமான பயணிகள் சேவை மற்றும் தரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தம் 2025-10-31 திகதியுடன் முடிவடைந்துள்ளது. பொருள் களஞ்சிய முகாமைத்துவ சேவை வழங்கல் ஒப்பந்தம் 2025-12-31 திகதி முடிவடைய உள்ளது. குறித்த விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான கம்பனிக்காக விமானப் பயணிகள் சேவை மற்றும் தரைச் சேவைகள் மற்றும் பண்டங்கள் களஞ்சிய முகாமைத்துவ சேவை வழங்கும்; இயலுமையுள்ள பொருத்தமான சேவை வழங்குநர்களை தெரிவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டிப் பெறுகை முறையைப் பின்பற்றி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 06 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய, உயர் மட்ட நிரந்தரப் பெறுகை குழுவின் விதந்துரைக்கமைய மேற்குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 6.49 மில்லியன் யூரோ மதிப்பீட்டுச் செலவில் 03 ஆண்டு காலத்துக்கு (2025-11-01 தொடக்கம் 2028-10-31 வரை) விமான பயணிகள் சேவை மற்றும் தரை சேவை வழங்கல் ஒப்பந்தந்தத்தை கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள  குறைந்தபட்ச விலைமனுதாரரான  Fraport Ground Services Gmbh நிறுவனத்துக்கு வழங்குதல்.

 6947,766 மில்லியன் யூரோ மதிப்பீட்டுச் செலவில் 03 ஆண்டு காலத்துக்கு (2025-11-01 தொடக்கம் 2028-10-31 வரை) பொருள் களஞ்சிய முகாமைத்துவ சேவை வழங்கல் ஒப்பந்தந்தத்தை கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்தபட்ச விலைமனுதாரரான  CHI Aviation Handing Gmbh  நிறுவனத்துக்கு வழங்குதல்.

16. கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய (ஓட்டிசம்) மற்றும் நரம்பு விருத்தி அலகை விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
2025 வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் ஓட்டிசம் உள்ளிட்ட நரம்பு விருத்தி இயலாமைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையத்தை கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்காக முன்னுரிமை வழங்குவதற்கு 2025-10-21 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேற்குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூ. 398.09 மில்லியன்களாகும். உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்தவதற்கு தேவையான நிதி மத்திய கால வரவுசெலவு சட்டகத்திற்குள் ஏற்பாடு செய்து திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகராம் வழங்கியது.

17. பேரிடருக்கு பின்னரான மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உதவி வழங்குவதற்காக தற்போது அமுல்படுத்தப்படும் உலக வங்கித் திட்டத்தில் உள்ளடங்கியுள்ள அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டுவருதல்.
அண்மைக்ககால வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு நாடு பூராவும் ஏற்பட்டது. அதன் மூலம் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு, வாழ்வாதாரம் அழிவடைந்து மற்றும் அத்தியாவசிய பொது வசதிகள் அழிவடைந்தமையுடன், விவசாயக் காணிகளும் அழிவடைந்துள்ளன. மேற்குறித்த நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், உடனடி பதில்வினையாற்றுதல் தொடக்கம் நீண்ட கால தலையீடுகள் வரையான விரிவான வகையில்  நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி பங்காளர்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஏற்கனவே உடனடி தலையீடு மேற்கொண்டுள்ளன அல்லது தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. அதற்கமைய சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக கட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டு நிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கும், உத்தேச அவசர பதில்வினையாற்றல் கூறுகள் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 92 – 112 இடையிலான அமெரிக்க மில்லியன் டொலர் தொகையை பெறுவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

18. பேரிடருக்கு பின்னரான நிவாரண மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்திலிருந்து நன்கொடை பெறுதல்
நோய் பரம்பல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் பேரிடரின் பின்னர் உயிர்காப்பு சேவைகளை உடனடியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு அபிவிருத்தி நன்கொடை வழங்குவதற்காக 2009-04-01 திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியம் நிறுவப்பட்டுள்ளது. தித்வா சூறாவளி காரணமாக முகங்கொடுத்த பேரிடர் தொடர்பாக செயற்படும் அவசர பதில்வினையாற்றல் திட்டத்துக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய பசுபிக் பேரிடர் பதில்வினையாற்றல் நிதியத்தின் கீழ் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. மேற்குறித்த நன்கொடை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உயிர்ப் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, மேற்குறித்த நன்கொடையை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன்  தொடர்புடைய உடன்படிக்கையை எட்டுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

19. பேரிடர் தாக்கத்துக்கு உள்ளான வழிபாட்டுத் தலங்களை துப்பரவு செய்து, செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுதல்
மோசமான வானிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக உதவி வழங்குதல் பொருத்தமானதென அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக ரூ. 25,000 கொடுப்பனவை வழங்குவதற்கும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

20. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீள கட்டியெழுப்புவதற்கு உதவும் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.
பல ஆண்டுகளாக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவை பலப்படுத்துவதற்காக அரசு பல்வேறு சலுகை கடன் திட்டங்கள் அமுல்படுத்தியுள்ளது. அவற்றில் கைத்தொழில் மற்றும் உறபத்தி துறைகளில் முதலீடு செய்வதற்காக SMILE  – கட்டம் II, சுற்றாடல் நேய நிதியாக்கலுக்காக E-FRIEND  கட்டம் II மற்றும் அனைத்து நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளுக்கு விரிவான மற்றும் இலகுவான பிரவேசத்துடன் நிதியுதவி வழங்கும், அரசினால் நிதி வழங்கப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவை மீண்டும் உயிரோட்டம் பெற செய்தல் (RE MSME) ஆகிய கடன் திட்டங்களை ஒருங்கிணைத்து, 2026 ஆண்டிலிருந்து  RE-MSME PLUS  திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளை மீண்டும் உயிரூட்டுவதற்காக பேரிடர் நிவாரண (RE-MSME – Disaster Relief) கடன் திட்டம் எனும் பெயரில் புதிய கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ் அண்ணளவாக 130,000 தொழில்முயற்சிகளுக்கு உடனடி மற்றும் மத்திய கால நிதியுதவி வழங்கும் செயன்முறையை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேசக் கடன் திட்டத்தின் கீழ் நுண் தொழில்முயற்சிகளுக்கு ரூ. 250,000 மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சிகளுக்கு ஆகக்கூடியது ரூ. 1,000,000 தொகையை 06 மாத சலுகைக் காலத்துடன் வருடாந்தம் 3% வட்டி விகிதத்தில் 03 ஆண்டு காலப்பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடன் திட்டத்தை அமுல்படுவதற்கு  RE-MSME – Disaster Relief  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில்  ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *