மண்சரிவில் மகளை தொலைத்த ஒரு தாயின் கண்ணீர் கதை

Karan
By
Karan
4 Min Read
“நான் ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவை இங்கே வந்து தேடுகிறேன். தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்” என மண்சரிவில் தமது மகளை தொலைத்த பதுளை – கந்தகெட்டிய – நாகொல்ல பகுதியைச் சேர்ந்த கே.எம். பண்டார மெணிக்கே (50) என்ற தாய் கண்ணீருடன் கதறுகிறார்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய நாகொல்ல கிராமத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் மகளான எம்.ஜி. காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ (21) என்ற யுவதி காணாமல் போயுள்ளார்.
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகின்ற போதிலும் அவரைப் பற்றி எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. அதேவேளை, யுவதியின் பாட்டனார் எம்.ஜி. நேட்ரிஸ் (82) மற்றும் பாட்டி டி.ஏ.பியசீலி திஸாநாயக்க (72) ஆகியோரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
இந்த மண்சரிவில் இந்த மூவரைத் தவிர, நாகொல்ல கிராமத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
தமது குடும்பத்துக்கு ஏற்பட்ட இந்தச் சோகத்தைப் பற்றி காணாமல் போன மகளின் தாய், பண்டார மெணிக்கா பின்வருமாறு விபரித்தார்.
“கடந்த 24ஆம் திகதி முதல் மூன்று நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. சம்பவ தினமாக 27ஆம் திகதி பிற்பகல் நானும் மகளும் மேலிருந்த வீட்டில்தான் இருந்தோம். கணவர் விசேட அதிரடிப்படையில் பணிபுரிகிறார்.
எங்கள் வீட்டுக்குக் கீழேதான் என் அம்மாவும் அப்பாவும் வசித்தார்கள். சம்பவ தினத்தன்று மகளும் நானும் அம்மாவின் வீட்டுக்கு அருகில் இருந்தோம். அப்பா வீட்டுக்குள் இருந்தார்.
மகன் வயல்வெளிப் பக்கம் போயிருந்தான். மாலை 3.30 அளவில் தான் இந்தச் சம்பவம் நடந்தது. இது அனைத்தும் 10 – 15 நிமிடங்களுக்கு அரங்கேறியது.
Messenger

திடீரெனக் கற்கள் உருளும் சத்தம் கேட்டது. விமானம் செல்கிறதா என்று மேலே பார்த்தோம். அதே சமயம், பூமி அதிரவும், உருளவும் தொடங்கியது. மகளும் சுழல ஆரம்பித்தாள். அவளுக்கு அது ஒரு வேடிக்கை போல இருந்தது. அவள் சத்தமாகச் சிரித்தாள்.
‘ஏதோ நடக்கிறது அம்மா, மண்சரிவுதான் வருகிறது’ என்று அவள் என்னைக் கூப்பிட்டபடி ஓடத் தொடங்கினாலும் எங்களால் ஓட முடியவில்லை.
மகளின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவள் எனக்கும் முன்னால் தோட்டப் பக்கம் குதித்தாள். ஆனால், கை நழுவிவிட்டது. நானும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டேன். அப்போது என் மகன் ஓடிவந்து என்னைத் தூக்கி கரை சேர்த்தான்.
நான் சிறிது நேரம் சுயநினைவை இழந்துவிட்டேன். ஆனால் என் மகளை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
சிறிது நேரத்திற்குப் பிறகுதான் எனக்குச் சுயநினைவு முழுமையாக வந்தது. அதன் பிறகு அப்பா வீட்டில் ஒரு அறைக்குள் புதைந்திருந்தபோது வெளியே எடுக்கப்பட்டார். ஆனாலும் சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன், ‘நமது குடும்பமே முடிந்துவிட்டது, மகளைக் கண்டுபிடி’ என்று என்னிடம் சொன்னார்.
நான் மேலே ஓடிச் சென்று, என் பிள்ளைகளை தேடிக் கொடுங்கள் என்று எல்லோரிடமும் கெஞ்சினேன், கதறினேன், சிலர் வந்து தேடினார்கள்.
ஆனால் இரவு ஆகிவிட்டதால் அவர்கள் தேடுவதை நிறுத்திவிட்டார்கள். இப்போது பதினொரு நாட்கள் ஆகிவிட்டன. மகளின் அடையாளமாவது கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக நான் ஆயிரக்கணக்கான முறை இங்கு வந்திருப்பேன். ஆனால் மகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
யாராவது வந்து இந்தக் கற்களையும் மரங்களையும் அகற்றிப் பார்த்தால் என் மகளை கண்டுபிடிக்கலாம். இங்கு 2 அல்லது 3 அடி ஆழத்தில் அவள் இங்கே இருக்கிறாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.
ஏனென்றால், அவள் எனக்கும் முன்னால் தான் இந்தப் பக்கம் குதித்தாள். என் மகன் இல்லாவிட்டால் நானும் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.” என அவர் கண்ணீருடன் கூறினார்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *