ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்ற இலங்கை வீரர்கள் ரூமேஷ் தரங்க மற்றும் பாலித பண்டார நேற்று (04) நாட்டை வந்தடைந்தனர். ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ரூமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பாரா பிரிவு பரிதிவட்டு எறிதல் (Discus Throw) போட்டியில் பங்கேற்ற பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இரு வீரர்களும் ஸ்கொட்லாந்திலிருந்து டுபாய் வழியாக எமிரேட்ஸ் விமான சேவையின் EK-650 விமானத்தில் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தங்கம் வென்ற ரூமேஷ் தரங்க, பாலித பண்டாரவுக்கு கௌரவம்

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
