பாயெர்ன் முனிச் கோல் மழை! பண்டஸ்லிகாவில் சரவெடி ஆட்டம்

1 Min Read

செயிண்ட் பாலி அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் பாயெர்ன் முனிச் 5-0 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பண்டஸ்லிகா

ஹம்பர்கின் மில்லெர்ன்டர்-ஸ்டேடியன் மைதானத்தில் நடந்த பண்டஸ்லிகா போட்டியில், பாயெர்ன் முனிச் மற்றும் செயிண்ட் பாலி அணிகள் மோதின.

Jamal Musiala

ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே ஜமால் மியூசியாலா அபாரமாக கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் பாலி அணி திணற, பாயெர்ன் முனிச் 1-0 என்ற கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக செயல்பட்ட பாயெர்ன் முனிச் வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர்.

மிரட்டல் வெற்றி

லியோன் கோர்ட்ஸ்கா 53வது நிமிடத்திலும், மைக்கேல் ஓலிஸ் 54வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

Jamal Musiala

அதனைத் தொடர்ந்து நிக்கோலஸ் ஜாக்சன் 65வது நிமிடத்திலும், ரபேல் குரெர்ரேய்ரோ 89வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர்.

இறுதிவரை செயிண்ட் பாலி கோல் அடிக்காததால், பாயெர்ன் முனிச் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மிரட்டல் வெற்றி பெற்றது.

Bayern Munich vs St Pauli

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *