மண்முனை மேற்கு வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி

1 Min Read

மண்முனை மேற்கு வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி பாஸ்கரன் நிலக்சிகா அவர்களை இன்றைய தினம் நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை சார்பாக வாழ்த்தி கௌரவித்தது.

மட்/மமே/விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 9 வரையும் கல்வி கற்று பின்னர் தரம் 10,11 மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கற்று, 2022(2023)க.பொ.சா/த பரீட்சையில் 8A C பெறுபேற்றைப்பெற்று,மட்/மட்/வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் விஞ்ஞான துறையில் தோற்றி அண்மையில் வெளிவந்த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி பாஸ்கரன் நிலக்சிகா அவர்களை இன்று-10/04/2026 இல்லம் நாடி நாவற்காடு-அக்னிச் சிறகுகள் பேரவை சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாணவி நிலக்சிகா அவர்களை அக்னிச் சிறகுகள் பேரவை இணைப்பாளர் திரு.சோ.சிவாகரன் மற்றும் சிறந்த சமுக ஆர்வலர் திரு.வெ.சிவலோகநாதன் ஆகியோர் மாணவியின் இல்லம் சென்று வழங்கியிருந்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *