கில்லுக்கு அபராதம்

1 Min Read

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் சுப்மன் கில்லுக்கு இந்திய நாணயப்படி ரூபா 12 இலட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசிய காரணத்தினால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவருக்கு இந்தப் பருவத்தில் முதல்முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் போட்டியின் 14ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 1 ஓட்ட வித்தியாசத்தில் டெல்லி கெபிடல்ஸை வீழ்த்தியது. இது குஜராத் அணி இந்தப் பருவத்தில் பெறும் முதல் வெற்றியாக இருந்தபோது அந்தப் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை முடிக்கத் தவறியது.

இந்தப் பருவத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் கட்டும் 2ஆவது அணித் தலைவர் கில் ஆவார். ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் இதே குற்றத்திற்காக 2 முறை அபராதம் கட்டியுள்ளார். மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆரம்ப வீரர் அபிஷேக் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *