இந்தியாவின் மிகவும் மேம்பட்ட அணு உலை, யுரேனியத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, அதிகமாகக் கிடைக்கப்பெறக்கூடிய தோரியத்தைப் பயன்படுத்தும் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள The prototype fast breeder reactor (PFBR), அணுக்கரு வினையைத் தானாகவே தொடரக்கூடிய முக்கியத்துவம் மிக்க கட்டத்தை அடைந்துள்ளது. அதனால் இந்த அணு உலை முழுமையாகச் செயல்படத் தொடங்கியவுடன், ரஷ்யாவுக்குப் பிறகு வணிக ரீதியான வேகப் பெருக்க அணு உலையைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா திகழும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.’இது இந்தியாவுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம்’ என்றும், ‘நாட்டின் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதில் ஒரு திருப்புமுனை’ என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

‘இந்த ஆலை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இம்மேம்பட்ட அணு உலை, நமது அறிவியல் திறனின் ஆழத்தையும் பொறியியல் முயற்சியின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இது, திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் பரந்த தோரியம் இருப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தீர்க்கமான படி’ என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அல் ஜசீரா




