நேட்டோ நாடுகளை மீண்டும் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

1 Min Read

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்காததற்காக நேட்டோ அமைப்பு நாடுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேட்டோ அமைப்பு நாடுகளின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஜனாதிபதி ட்ரம்ப்பை வௌ்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்தே அவர் நேட்டோ அமைப்பை மீண்டும் விமர்சித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் ட்ருத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ‘நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அங்கே இருக்கவில்லை, மீண்டும் நமக்குத் தேவைப்பட்டாலும் அவர்கள் அங்கே இருக்க மாட்டார்கள்’ என்றுள்ளார். மார்க் ருட்டே ஜனாதிபதி ட்ரம்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தெளிவான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் சி.என். என் இற்கு அளித்த பேட்டியில் சந்திப்பு மிகவும் வெளிப்படையானதும் மிகவும் ஒளிவுமறைவற்றதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ கூட்டணியில் நீடிப்பது ட்ரம்பின் நலனுக்கும், அமெரிக்காவின் நலனுக்கும் உகந்தது என்று அவரைச் சமாதானப்படுத்தி, இணங்க வைக்கும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *