பாடசாலை ரக்பி லீக்கில் ஸாஹிரா அணி களத்தில்

1 Min Read

கொழும்பு ஸாஹிரா கல்லூரி ரக்பி அணிக்கு அனுசரணை வழங்க பல நிறுவனங்களும் முன்வந்திருப்பதோடு அந்த அணி டயலாக் பாடசாலை ரக்பி லீக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்வு கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றது. இதில் உரையாற்றிய கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், புதிய பருவத்தை முன்னிட்டு தொடர்ந்து ஆதரவு வழங்கிய அனுசரணையாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான ஸாஹிரா ரக்பி அணிக்கு RIDE, Diamond Milk, Roza Pasta, ATG Gloves, Bairaha, TVS Lanka, Dialog, SUN FM, Hemas Hospitals, American Premium Water, Frosty, LB Finance மற்றும் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை அனுசரணை வழங்குகின்றன.

அணிக்கு ஹக்கீம் சுஞ்சி தலைமை தாங்குகிறார். முன்னாள் இலங்கை தேசிய வீரரும், சம்பியன் பட்டம் வென்ற பயிற்சியாளருமான ராதிகா ஹெட்டியாராச்சி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார்.

ஸாஹிரா கல்லூரி அணி எதிர்வரும் ஏப்ரல் 26இல் கண்டி நிட்டாவெல மைதானத்தில் கிங்ஸ் வுட் கல்லூரிக்கு எதிரான போட்டியுடன் டயலாக் பாடசாலை ரக்பி லீக் தொடரை ஆரம்பிக்கவுள்ளமை குறி ப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *