நியூசிலாந்து ரக்பி அணி இலங்கை சுற்றுப் பயணம்

1 Min Read

85 கிலோ எடைக்கு உட்பட்ட வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை தேசிய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதல் போட்டி ஏப்ரல் 25 கொழும்பிலும், இரண்டாவது போட்டி மே 03 கண்டியிலும் நடைபெறவுள்ளன.

இலங்கைக்கு வருகை தருகின்ற 85 கி.கி. எடைக்கு உட்பட்ட வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் சுற்றுப்பயணத்திற்கு இம்முறை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் மலிபன் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

இச்சுற்றுப்பயணமானது வெறுமனே ஒரு போட்டித்தொடர் என்பதற்கும் அப்பால், எமது வீரர்களுக்கு உத்வேகமளித்து, எமது கட்டமைப்புக்களுக்கு சவால் விடுத்து, இலங்கை ரக்பி சங்கத்தை அடுத்த மட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவுமென, இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் பவித்ர பெனாண்டோ தெரிவித்தார்.

கழகங்களுக்கு இடையிலான மலிபன் ரக்பி சுற்றுப்போட்டி மற்றும் மலிபன் கிளிஃபேர்ட் கிண்ண நொக்அவுட் சுற்றுப்போட்டி 2025-2026 என நாட்டில் இடம்பெறும் மிகவும் முக்கிய இரண்டு ரக்பி போட்டிகளுக்கு பிரதான அனுசரணையை மலிபன் வழங்குகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *