மூலிகை செடிகளில் ஒன்றாக விளங்கும் துளசிச் செடியினை நாம் அனைவருமே வீட்டில் வளர்த்து வருவோம். இச்செடியானது அதிகபட்சம் 50 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. ஆனால், ஒரு சில வீடுகளில் துளசி வளராமல் இருக்கும்.
சில செடிகள் பூச்சு தாக்குதல்களால் வளராமல் இருக்கும். சில செடிகள் ஆதற்கு தேவையான சத்து கிடைக்காமல் இருப்பதால் வளராமல் இருக்கும். செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருக்கும் செடிகளுக்கு நாம் இயற்கையான முறையில் செய்த உரத்தினை அளிக்க வேண்டும். அதனை பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
முட்டை ஓடு பொடி உரம்:
முட்டை ஓடுகளில் உள்ள கல்சியம் தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. முட்டை ஓடுகளை சுத்தம் செய்து நன்றாக காயவைத்து, ஒரு மிக்ஸி ஜாரின் போட்டு கொரகொரப்பாக பொடியாக அரைத்து துளசி செடியின் அடிப்பகுதியைச் சுற்றி போடவும். இவ்வாறு செய்தால் துளசி செடி செழித்து வளரும்.

காய்கறி கழிவு உரம்:
காய்கறி துண்டுகளை/ காய்கறியின் தோல் போன்றவற்றை தண்ணீரில் சில நாட்கள் ஊறவைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி துளசி செடிக்கு ஊற்றினால் செடி நன்றாக வளரும்.

வாழைப்பழத் தோல் உரம்:
வாழைப்பழ தோலில் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை நாம் உரமாக செடிகளுக்கு போடும்போது, செடிகள் நன்றாக வளர தொடங்கும்.
வாழைப்பழத் தோலினை காயவைத்து, அரைத்து துளசி செடியின் அடிப்பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றவும். இவ்வாறு செய்தால் செடி நன்றாக பசுமையாக வளரும்.

வேப்ப உரம்:
வேப்பம் பிண்ணாக்கில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ளது. வேப்பம் பிண்ணாக்கினை துளசி செடியின் அடிப்படுத்தியில் போட்டு தண்ணீர் ஊற்றினால் அதற்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொண்டு நன்றாக வளரும்.

மாட்டு சாண நீர்:
மாட்டு சாணத்தை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி கலந்து, இந்த கரைசலை செடியில் அடிப்பகுதியில் தெளித்து வந்தால் செடி பசுமையாக வளரும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்தால் செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.




