Air Sports International (Pvt) Ltd தனது புதிய Air Sports Club ஐ எதிர்வரும் ஏப்ரல் 08 அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இசுரு ஹேவாபராக்ரம, புர்ஹானுதீன் தாசீம் மற்றும் கணாதரன் ஜெயகுமார் ஆகியோரின் தூரநோக்குச் சிந்தனையில் உருவான Air Sports Club, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் புதிய மாற்றங்களையும் தனித்துவத்தையும் எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுக்கு ஒரு பொருத்தமான தருணத்தில் தனது திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக செலவில் சர்வதேச தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வசதி, முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளதுடன், போட்டிகள் மற்றும் நிகழ்வுகளை சர்வதேச ரீதியில் நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு ஏதுவான நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது.

இங்கு நவீன ரக Pickleball மற்றும் Badminton திடல்கள், மேசைப்பந்து, அங்கத்தவர் ஓய்வறை மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகள் காணப்படுகின்றன. அத்துடன் யோகா, நடனம், Zumba, Pilates போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கான பல்நோக்கு அரங்கும் இங்கு அமைந்துள்ளது.




