வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களில் புதுமைகளைவழங்கி வரும் ஹட்ச் நிறுவனம், International Fast Mode Awards நிகழ்வில் ‘உலகளாவிய அங்கீகாரத்தை’ சம்பாதித்துள்ளது

1 Min Read

அண்மையில் இடம்பெற்ற International Fast Mode Awards விருதுகள் நிகழ்வில் வளர்ச்சி என்ற பிரிவின் கீழ் மதிப்புமிக்க ‘Customer Champion’ விருதை ஹட்ச் நிறுவனம்சம்பாதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்கின்ற அனுபவங்களை முற்றிலும் மாற்றியமைத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை திறன்மிக்க வழியில் கைக்கொண்டு மிகச் சிறந்த மதிப்பை அவர்களுக்கு வழங்குவதில் ஹட்ச் நிறுவனம் முன்னிலை வகித்து வருவதைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஹட்ச் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், அதியுச்ச மட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை மேம்படுத்துவதை சிறப்பாகப் பின்பற்றி, பெருந்தரவு (big data) தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவால் (AI) முன்னெடுக்கப்படும் வாடிக்கையாளர் குறித்த ஆழமான புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் மூலமாக புதிய சர்வதேச தரஒப்பீட்டை நிலைநாட்டியுள்ளது.

அதேசமயம், வலுவான மற்றும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் முகாமைத்துவ வியூகத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கான நேரடி அனுபவங்களையும் சிறப்பான மட்டத்தில் பேணி வருகின்றது. இந்த வியூகத்தின் கீழ் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடுகளைப் பேணவும், அவர்கள் உள்ளடக்கப்படுவதை 100% உறுதி செய்யவும் பரந்த வகைப்பட்ட பிரத்தியேக டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் அல்லாத வழிமுறைகள் மூலமாக உடனுக்குடன் செயல் நடவடிக்கைகளுடன் அவர்களுக்கான அனுபவங்கள் வழங்கப்படுகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *