கொழும்பு, இலங்கை, மார்ச் 14, 2026 – இலங்கையில் முன்னணி நவநாகரிக ஆடையணி விற்பனைச் சங்கிலியாகத் திகழ்ந்து வருகின்ற நோலிமிட், நாடெங்கிலும் தொடர்ந்து அகலக் கால்பதித்து வருகின்ற நிலையில், தனது 29வது வியாபார மையத்தை கிரிபத்கொடை நகரில் திறந்து வைத்துள்ளது. இந்த வர்த்தகநாமம் தற்போது முன்னெடுத்து வருகின்ற வளர்ச்சிப் பயணத்தில் மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைற்கல்லாக இது மாறியுள்ளது. கிரிபத்கொடை மாகொல வீதியிலுள்ள உதேஷிசிட்டி ஷொப்பிங் கொம்பிளெக்ஸிலுள்ள G-3 ல் திறக்கப்பட்டுள்ளது.





