இலங்கையின் முதன்மையான ஆதன நிர்மாண நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties – JKP), தனது மற்றுமொரு குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றமை குறித்து அறிவித்துள்ளது. Vauxhall DSTRCT என்ற பெயரில் அமையவுள்ள இச்செயற்திட்டமானது கொழும்பின் நகர மையத்தில் 60 மாடிகள் கொண்ட குடியிருப்புச் செயற்திட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே 100 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையானது இச்செயற்திட்டத்திற்குசந்தையில் எந்தளவு கேள்வி உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. கொழும்பின் மையத்தின் சிறந்த இடத்தில் அமையும்இக்குடியிருப்புக்கு சிறந்த கேள்வி உள்ளமையை இது எடுத்துக்காட்டுகின்றது.

கொழும்பு 02, வொக்சோல் வீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையவுள்ள இச்செயற்திட்டமானது கொழும்பிலுள்ளஅத்தனை வசதிகளையும் கொண்ட நகர்ப்புற அமைவிடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.




