பின்தங்கிய பிரதேசங்களில் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்தும் ஹட்ச், இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுங்குமுறை ஆணைக்குழு

1 Min Read

டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இடைவெளியைப் போக்கி, இலங்கையில் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களுக்கும் நவீன டிஜிட்டல் வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் ஒரு தேசிய இலக்குடன் GamataSanniwedanaya என்ற நிகழ்ச்சித்திட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. அதனை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவுவதற்காக ஹட்ச் நிறுவனமும், இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் தற்போது ஒன்றிணைந்து பணியாற்ற முன்வந்துள்ளன. இத்தேசிய இலக்கினை அடைவதற்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கியமான தொழிற்துறைப் பங்காளர் என்ற ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களிலும் டிஜிட்டல் வசதிகள் கிடைக்கப்பெறுவதை முன்னெடுக்கும் தனது அர்ப்பணிப்பை ஹட்ச் தற்போது மேலும் வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய பிரதேசங்களில் தொடர்பாடல் வசதிகளில் நிலவி வருகின்ற இடைவெளிகள் காரணமாக அங்கு வாழ்கின்ற மக்களுக்கான வளர்ச்சி வாய்ப்புக்களுக்கு மிக நீண்ட காலமாக பாரிய முட்டுக்கட்டை நிலவி வருகின்ற நிலையில், இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *