இலங்கையைச் சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினி விபரீத முடிவு – கணவருடன் வீடியோ காலில் ஏற்பட்ட தகராறு காரணமா?

1 Min Read

சன் தொலைக்காட்சியின் பிரபல ‘கயல்’ சீரியலில் நடித்து வந்த இலங்கையைச் சேர்ந்த நடிகை சுபாஷினி, சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதான சுபாஷினியின் கணவர் பெங்களூரில் வசித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்காக சுபாஷினி மட்டும் சென்னையில் தங்கியிருந்துள்ளார்.

நேற்று இரவு சுபாஷினி தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சண்டையினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தவறான முடிவெடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐயப்பன்தாங்கல் பொலிஸார், சுபாஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பெங்களூரில் இருந்து சென்னை வந்த அவரது கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *