அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரானிய உளவுத்துறைத் தலைவர் மஜீத் ஹதேமி உயிரிழப்பு – ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

1 Min Read

ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) மிக சக்திவாய்ந்த அதிகாரிகளில் ஒருவரான உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜீத் ஹதேமி, இன்று (06) அதிகாலை நடத்தப்பட்ட “பயங்கரவாதத் தாக்குதலில்” கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இன்று (06) விடியற்காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து முன்னெடுத்த ஏவுகணைத் தாக்குதலின் போதேஇவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட IRGC-இன் அறிக்கையில், “அமெரிக்க – சியோனிச எதிரிகளால்” நடத்தப்பட்ட தாக்குதலில் மஜீத் ஹதேமி வீரமரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈரானின் உளவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மிக முக்கியமான மற்றும் உயர்மட்ட அதிகாரியாகக் கருதப்பட்டவர். இவரது இழப்பு ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் 45 நாள் போர்நிறுத்தம் மற்றும் ‘இஸ்லாமாபாத் உடன்படிக்கை’ குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக உயரிய இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருப்பது இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.\

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *