நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கை முதன்முறையாக மனிதர்கள் நேரடியாக பார்த்துள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 பயணம்
நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 பேர் அடங்கிய குழு, ஓரியன் விண்கலம் மூலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதியை நோக்கி மனிதர்கள் புறப்பட்டுள்ள பயணம் இதுவாகும். இந்த குழுவினர் நிலவில் தரையிறங்காமல் நிலவை முழுவதுமாக சுற்றி வர உள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 குழுவினர் விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.
நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கு
இந்நிலையில், நிலவில் உள்ள ஓரியண்டேல் பள்ளத்தாக்கை(orientale basin) பார்த்துள்ள முதல் மனிதர்கள் என்ற பெருமையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் பெற்றுள்ளனர்.
3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், நிலவில் பெரிய விண்கல் மோதியதில் உருவான பள்ளத்தாக்குகளிலேயே ஓரியண்டேல் பள்ளத்தாக்கு தான் மிகவும் இளமையானது என நம்பப்படுகிறது.
965 கிமீ அகலம் கொண்ட இந்த பள்ளத்தாக்கு நிலவின் மேற்குப்பகுதியில் விளிம்பில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை ஆளில்லா விண்கலங்களே இந்த பள்ளத்தாக்கை படம் பிடித்த நிலையில், முதல்முறையாக மனிதர்கள் தங்கள் கண்களால் பார்த்து இதனை படம் பிடித்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், ஆர்டெமிஸ் 2 குழுவினர் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.




