இரசாயன ஆலைகள், துறைமுக நகரம் மீது உக்ரைன் தாக்குதல்: வெளிநாட்டுக் கொடி கப்பலில் தீயை மூடிய பாகங்கள்

1 Min Read

ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

துறைமுக நகரம் மீது தாக்குதல்

ரஷ்யாவின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள தாகன்ரோக் துறைமுக நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ukraine strike on russia one killed

உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் ஆளுநர் யூரி ஸ்லியுசர் தெரிவித்தார்.

மேலும், வர்த்தக மையம் ஒன்றை ஒரு ஏவுகணை தாக்கியதாகவும், அசோவ் கடலில் விழுந்த ட்ரோனின் பாகங்கள் வெளிநாட்டுக் கொடி கொண்ட சரக்குக் கப்பலில் தீயை மூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இரசாயன ஆலைகள்

அதேபோல் ரஷ்ய ஊடகங்களில் வெளியான சரிபார்க்கப்படாத செய்திகளின்படி, டோல்யாட்டியில் உள்ள இரண்டு இரசாயன ஆலைகள் மீது ட்ரோன் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்ட ஒருநாள் கழித்து, ரோஸ்டோவ் மற்றும் சமாரா பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ukraine strike on russia one killed

ukraine strike on russia one killed

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *