ஈரான் எண்ணெய் கப்பல் சீனாவிற்கு திருப்பப்பட்டதாக வெளிவந்த தகவல்களை மறுத்த இந்தியா

1 Min Read

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு வந்த கச்சா எண்ணெய் கப்பல், சீனாவிற்கு திருப்பப்பட்டதாக வெளிவந்த தகவல்களை இந்தியா மறுத்துள்ளது.

இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சகம், “இந்த தகவல்கள் உண்மையல்ல. கப்பல்கள் சில நேரங்களில் ‘trade optimisation’ மற்றும் ‘operational flexibility’ காரணமாக தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில், குஜராத்தின் வடிநார் துறைமுகத்தை நோக்கிச் சென்றிருந்த ஒரு கப்பல், திடீரென தனது இலக்கை சீனாவின் டோங்யிங் என மாற்றியிருந்தது.

இதனால், இந்தியாவுக்கு வரவிருந்த ஈரான் எண்ணெய் சரக்கு சீனாவுக்கு திருப்பப்பட்டது என்ற செய்திகள் பரவின.

India Iran oil tanker news, Iranian crude diverted to China claim, Vadinar Dongying oil shipment, India petroleum ministry statement, Hormuz Strait Indian vessels #IndiaOil #IranCrude #EnergySecurity #HormuzStrait #PetroleumMinistry #GlobalTrade

“இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருகிறது. வணிக தேவைகளின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவின் எண்ணெய் விநியோகம் பாதுகாப்பாக உள்ளது” என இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

மேலும், LPG விநியோகத்தில் சிக்கல் இல்லை என்றும், Sea Bird என்ற LPG கப்பல் 44,000 மெட்ரிக் டன் LPG-ஐ மங்களூரில் வெற்றிகரமாக இறக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலால் ஹார்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து சிக்கலான நிலையில் இருந்தாலும், இந்தியக் கப்பல்கள் தொடர்ந்து பாதுகாப்பாகச் சென்றுள்ளன.

Green Sanvi, Shivalik, Nanda Devi, Pine Gas போன்ற கப்பல்கள் ஹோர்முஸ் வழியாகச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *