அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்குரிய சைவப்புலவர்,இளஞ்சைவப்புலவர் பட்டத் தேர்வுகளுக்கான விரிவுரைகள் சங்கத் தலைவர் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் அவர்களால் நேற்று (04) மங்களகரமாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
மேற்படி ஆரம்ப நிகழ்வில் சைவப்புலவர் சங்கத்தின் உப தலைவரும் -இணைப்பாளருமான சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம், சைவப்புலவர் விஜயலக்ஷ்மி,சைவப்புலவர் சுந்தரமதி ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





