சுட்டு வீழ்த்தப்பட்ட 160 க்கும் மேற்பட்ட டிரோன்கள்: வெற்றியை அறிவித்த ஈரான்

1 Min Read

160 க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஈரான் இராணுவ சுட்டு வீழ்த்தியுள்ளது.

ட்ரோன்கள் சுட்டு வீழ்த்திய ஈரான்

சனிக்கிழமை ஈரான் பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்த 160 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக தேசிய வான் பாதுகாப்பு கூட்டு தலைமையகத்தின் உயர் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா எல்ஹாமி தெரிவித்துள்ளார்.

ஏவப்பட்ட ட்ரோன்கள் எந்தவொரு தாக்குதலையும் முன்னெடுக்கும் முன்பே அனைத்து தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உயர் தளபதி வழங்கிய தகவலின் படி, MQ 9 ரீப்பர், ஹெர்ம்ஸ் மற்றும் லூகாஸ் ஆகிய நவீன ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலில் டஜன் கணக்கான க்ரூஸ் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக IRGC வெளியிட்ட தகவலில், இஸ்பஹான் மாகாணத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற MQ 1 ரக ட்ரோன் ஒன்று வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *