அமெரிக்காவில் மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண்: யார் இந்த ரினி சம்பத்?

1 Min Read

தேனி மாவட்டத்தை சேர்ந்த ரினி சம்பத் அமெரிக்காவில் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியின் மேயர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ரினி சம்பத் என்ற பெண் போட்டியிடுகிறார்.

இதன் மூலம் வாஷிங்டன் டிசியின் மேயர் தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை ரினி சம்பத் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண்: யார் இந்த ரினி சம்பத்? | Tamil Girl Rini Sampath Fight Washington Election

யார் இந்த ரினி சம்பத்?

7 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்த தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ரினி சம்பத்(31) என்ற இளம்பெண்  கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் வசித்து வருகிறார்.

அமெரிக்க மேயர் தேர்தலில் போட்டியிட 4500 வாக்காளர்களின் கையெழுத்து தேவைப்படும் நிலையில் அதைவிட இரண்டு மடங்கு வாக்காளர்கள் கையெழுத்துக்களை பெற்று தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை ரினி சம்பத் பெற்றுள்ளார்.

ரினி சம்பத் சமீபத்தில் பேசிய போது, அமெரிக்காவிற்கு கனவை தேடி வந்தேன், ஆனால் தற்போது வாஷிங்டன் டிசி மக்களுக்காக போட்டியிடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தெற்காசிய மக்கள் பெரும் பங்காற்றினாலும் அரசு இயந்திரத்தில் தெற்காசிய சமூகத்தின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார், நான் இப்போது தேர்தலில் போட்டியிடுவது என்பது மற்றவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 16ம் திகதி முதன்மை தேர்தல் நடைபெறும் நிலையில், வாஷிங்டன் நகரின் அடிப்படை தேவைகளான சீரான சாலை, கழிவு நீர்க் கசிவைத் தடுத்தல், வாழ்க்கைச் செலவுகளை குறைத்தல் ஆகிய முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ரினி சம்பத் வழங்கியுள்ளார்.

முதன்மை தேர்தலில் வெற்றி பெற்றால், நவம்பர் மாதம் நடைபெறும் மேயர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *